அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ, அவரது பெற்றோர், நாட்டை விட்டு இன்றுகாலை வெளியேறியுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்திற்கு எதிராக, மக்களிடத்தில் எதிர்ப்புக்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இந்நிலையிலேயே அவர்கள் நாட்டை விட்டு வெளியியேறியுள்ளது.
நாமல் ராஜபக்ஷவின் மனைவி, லிமினி ராஜபக்ஷவும் அவரது பெற்றோரும் வெளிநாட்டில், தெரியாத இடத்திற்குச் சென்றதாக ஆதாரங்கள் உறுதி செய்தன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மற்ற இரு மருமகள்களும் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை