முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி மற்றும் அவருடைய பெற்​றோர் உட்பட ஒன்பது பேர், நாட்டை விட்டு சென்றுவிட்டனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ, கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக டுபாய் நோக்கி பயணித்துவிட்டார்.நேற்றிரவு 10.25 புறப்பட்டுச் சென்ற எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான ரி.கே. 655 என்ற விமானத்திலேயே டுபாய் நோக்கி பயணிமாகியுள்ளார் என குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ, அவரது கணவர்   திருக்குமரன் நடேசன்  ஆகிய இருவரும் பெண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) என்ற பெயரில் வெளியான ஆவணங்களில் நிதிமோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சபைக்குள் காகம் கோஷம்: பதில் கோஷம் பசில்பாராளுமன்றத்தில் தற்போது சற்று சலசலப்பான  நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் “கோட்டா கோ ஹோம்” என எழுதப்பட்டுள்ள பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர்.

“கோட்டா கோ ஹோம்” எனும் கோஷத்துக்கு மத்தியில், பந்துல குணவர்தன உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.

இதனிடையே கா, கா, கா என்று காகம் கரைவதைப் போல எதிரணியினர் கா, கா, கா என சத்தமிட்டு,  பசில், பசில், பசில் என்றும் பதில் கோஷமிடுகின்றனர்.

Share.
Leave A Reply