அமெரிக்காவில் வீதியொன்றுக்கு ‘பிள்ளையார் கோவில் வீதி‘ (Ganesh Temple Street) என பெயரிடப்பட்டுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வட அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ‘பவுனே’ என்ற வீதிக்கே இவ்வாறு பெயர் மாற்றப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பிள்ளையார் கோயில் ஒன்று அமைந்துள்ள நிலையில் அவ்வீதிக்கு பிள்ளையார் கோவில் வீதி எனப் பெயர் மாற்றம் செய்யுமாறு அங்கு வாழும் இந்தியர்கள் கோரிக்கை விடுத்ததாகவும், இதற்கு அமைவாகவே அவ்வாறு பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் அண்மையில் குறித்த வீதிக்கு பெயர்ப் பலகை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளதோடு, இந்நிகழ்வில் நியூயோர்க்கில் உள்ள இந்திய துணை தூதர் ரந்தீர் ஜெய்ஸ்வால், குயின்ஸ் நகர தலைவர் டொனோவன் ரிச்சர்ட்ஸ், வர்த்தகம், முதலீடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான துணை ஆணையர் திலீப் ஆகியோர் கலந்து கொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply