ரஷியாவை யாராலும் தடுக்க முடியாது மற்றும் அதிபர் புதின் உலகை ஆளுவார் என கண் தெரியாத பாபா வாங்கா கணிப்பு வைரலாகி உள்ளது,
பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. கண் தெரியாத இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார்.
இவர் அங்கு, பல்கேரிய நாஸ்டர்டாமாக மதிக்கப்படுகிறார். இவர் 50 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார்.
இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவை பலித்தும் உள்ளன, நடந்தும் உள்ளன.
அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் எனக் கூறினார்.
அதேபோன்று அந்த தாக்குதல் நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது. அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என்று கணித்தார்.
அதே போல், ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார். பின்னர், 2016-ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும் எனவும் கணித்தார்.
இதைத் தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார் என கணித்தார், அதுவும் நடந்தது.
இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல நடந்துள்ளதால், இவருடைய கணிப்பை பற்றி பலரும் எதிர்பார்க்கின்றனர்.
2019 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இருந்தாலும் பாபாவை பின்பற்றுவோர் அவரது கணிப்பை நம்புகின்றனர்.
தற்போது, ரஷ்யா உக்ரைன் மீது பயங்கர தாக்குதலை நடத்தியதை அடுத்து, பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று மீண்டும் வைரலாகியுள்ளது.
பாபா வங்கா, எழுத்தாளர் வாலண்டைன் சிடோரோவிடம் கூறியதாவது :-
“அனைத்தும் கரைந்துவிடும், பனிக்கட்டி போல, ஒன்று மட்டும் தீண்டப்படாமல் இருக்கும் – விளாடிமிரின் மகிமை, ரஷ்யாவின் மகிமை. அதனை(ரஷ்யாவை) யாராலும் தடுக்க முடியாது, ரஷ்யா உலகின் அதிபதி ஆகிவிடும்”.
இவரது இந்த கணிப்பு இப்போது வைரலாகி வருகிறது.