தளபதி 66 அறிவுப்பும் எதிர்பார்ப்பும்…
பீஸ்ட் படத்துக்கு பிறகு நடிகர் விஜய் தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில் ‘தளபதி 66’ என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தை தோழா படத்தின் இயக்குனர் வம்சி இயக்குகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குனர் வம்சியோடு விஜய் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது.
Onboard கலைஞர்கள்…
இந்த படத்தில் விஜய்யைத் தவிர மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய எந்த விவரமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் தான் நேற்று தளபதி 66 படத்தின் கதாநாயகி ராஷ்மிகா என்றும் அந்த படத்தின் இசையமைப்பாளர் எஸ் எஸ் தமன் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
100 படங்களுக்கு மேல் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் விஜய்யுடன் இணையும் முதல் படம் இதுவாகும்.
தளபதி 66 பூஜை
இந்நிலையில் இப்படத்தின் பூஜை, இன்று சென்னையில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா, நடிகர் சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.
Cute விஜய்யும்…. Excited ராஷ்மிகாவும்
இந்நிலையில் விஜய்யோடு ராஷ்மிகா இருக்கும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விஜய்யோடு இருக்கும் உற்சாகத்தில் முகம் முழுவதும் மகிழ்ச்சியாக ராஷ்மிகா கொடுத்துள்ள ரியாக்ஷன்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
அதில் ஒரு புகைப்படத்தில் ராஷ்மிகா விஜய்க்கு திருஷ்டி முறிப்பது போல இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுல்தான் படத்துக்கு பிறகு ராஷ்மிகா நடிக்கும் நேரடி தமிழ் படமாக தளபதி 66 படம் அமைய உள்ளது.