சாத்திரம் சொல்லும் இடத்திற்கு வழி கேட்பது போல் பாசாங்கு செய்து பெண்மணி ஒருவரின் தங்க சங்கிலியை இருவர் அறுத்து சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை காலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண்மணி அவ்விடத்தில் நின்ற போது , மோட்டார் சைக்கிள் ஒன்றில் வாழை இலைகள் சிலவற்றுடன் வந்த இருவர் ,

அப்பகுதியில் சாத்திரம் சொல்பவர் எவரேனும் உண்டோ என கேட்டுள்ளனர். அதற்க்கு அப்பெண்மணி விலாசம் சொல்ல முற்பட்ட போது , மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் இருந்தவர் அப்பெண்மணியின் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு இருவரும் தப்பியோடியுள்ளனர்.

கொள்ளையர்களால் அறுக்கப்பட்ட தங்க சங்கிலி 2 பவுண் என பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply