அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகனின் வீட்டை மக்கள் சுற்றி வளைத்துள்ளனர்.

கோட்டாபயவின் மகனின் வீட்டிற்கு வெளியே நூற்றுக் கணக்கான மக்கள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது தந்தையை வீட்டிற்கு அழைக்குமாறு கூச்சலிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் தங்கள் பணத்தை திருப்பி தர வேண்டும் என மக்கள் கூறியுள்ளனர்.

லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மக்கள் இலங்கையர்களுடன் இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply