நாளாந்த டீசல் பாவனை 4,500 மெட்ரிக் தொன்னால் அதிகரித்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் – முதல் மூன்று மாதங்களில் நாளாந்த எரிபொருள் நுகர்வு சுமார் 5,500 மெட்ரிக் தொன் ஆக பதிவாகியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாளாந்த டீசல் பாவனை தற்போது 8,000 மெட்ரிக் தொன்னை விட அதிகரிப்பதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மின் உற்பத்திக்காக வழங்கப்படும் டீசலின் அளவிற்கு இணையாக மக்களின் நுகர்வும் அதிகரித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், அரசாங்கம் மாதாந்த எரிபொருள் தேவைக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட வேண்டியுள்ளதாகவும் இந்திய கடன் வசதியின் கீழ் மேலும் 37,500 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மண்ணெண்ணெய்க்கான நாளாந்த தேவையும் 800 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply