யாழில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த ஊவா பல்கலைக்கழக மாணவனான உ.கனிஸ்ரன் (வயது 22) என்பவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவரின் காதலி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்த மாணவர், தானும் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக மரண விசாரணையின் போது உறவினர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Share.
Leave A Reply