சென்னை : ரசிகர்கள் மட்டுமல்ல கோலிவுட்டே பொறாமைப்படும் அளவில் அழகான காதல் ஜோடியாக இருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள அனைவருமே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த ஜோடி கோயிலுக்கு போவது ஆகட்டும், சோஷியல் மீடியாவில் போடும் போஸ்ட் ஆகட்டும் அனைத்துமே உடனே டிரெண்டாகி விடுகிறது. சமீபத்தில் அஜித்தின் ஏகே 62 படத்தில் நயன்தாரா தான் ஹீரோயின் என வெளியான தகவலால், உடனே நயன்தாரா ஹேஷ்டேக்கை உருவாக்கி, ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கி விட்டார்கள்.

விக்கி மீது தீராத காதல்
நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது எவ்வளவு காதலுடன் இருக்கிறார் என்பது அவர் வெளியிடும் போட்டோக்களிலேயே நன்றாக தெரிகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட காத்துவாக்குல ரெண்டு காதல் பட ஷுட்டிங் நிறைவு நாளில் எடுத்துக் கொண்ட போட்டோக்களில் கூட நயன்தாரா, விக்னேஷ் சிவனின் கைகளை விடாமல் பிடித்தபடி நின்றார்.

லவ்வுக்கு இது தான் காரணமா
விக்னேஷ் சிவன் மீது நயன்தாரா இவ்வளவு காதலுடன் இருப்பதற்கு காரணம் ஒன்றே ஒன்று மட்டும் தானாம்.

எல்லா பெண்களும் விரும்புவது தனது காதலர் அல்லது வருங்கால கணவர் தன் மேல் அன்பு செலுத்துவதை போலவே தனது பெற்றோர் மீதும் அன்பாக, அக்கறையாக இருக்க வேண்டும் என்பதை தான். இந்த குணம் விக்னேஷ் சிவனிடம் இருப்பது தான் நயன்தாராவிற்கு அவரை இவ்வளவு பிடிக்க காரணமாம்

கேரளா போற ரகசியம் இதுதானா

சமீபத்தில் நயன்தாராவின் அப்பா குரியன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கேரளாவிற்கு சென்று, பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர்.

பிறந்தநாளைக்கு மட்டுமல்ல நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் தனி விமானத்தில் ஏறி கேரளா பறந்து விடுகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே நயன்தாராவின் அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அடிக்கடி கேரளா சென்று, தனது வருங்கால மாமனார் மற்றும் மாமியாருடன் நேரத்தை செலவிடுகிறார் விக்னேஷ் சிவன்.

எந்த பொண்ணுக்கு தான் பிடிக்காது
இப்படி ஜென்டில்மேனாக விக்னேஷ் சிவன் நடந்து கொண்டால் எந்த பெண்ணிற்கு தான் அவரை பிடிக்காது.

இதில் நயன்தாரா மட்டும் விதி விலக்கா என்ன. அதனால் தான் விக்னேஷ் சிவன் மீது தீராத காதலில் இருப்பதுடன் அதை அவ்வப்போது வெளிப்படுத்தவும் செய்கிறார் லேடி சூப்பர் ஸ்டார்.

இந்த ஆண்டு காதலர்தினத்தின் போது கூட விக்கியை பார்த்ததும் முதல் முறையாக பார்த்து காதலை சொல்வதை போல் ஓடிச் சென்று கட்டிபிடித்துக் கொண்டார் நயன்தாரா.

 

Share.
Leave A Reply