காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துள்ளார்.

இதன்போது, கூட்டத்தில் உரையாற்றிய அவர்,

“இந்த அரசாங்கம் இலங்கை காவல்துறையின் முதுகெலும்பை உடைத்துவிட்டது. இந்த சீருடை அணிவதை விட சுரங்க தொழில் செய்து பிழைப்பு நடத்துவது கண்ணியம், மரியாதை என என் மனைவியிடம் கூறியுள்ளேன்.

நாளை என்னை வேலையிலிருந்து நீக்கப் போகிறார்கள். நான் உறுதியாக இருக்கிறேன். நான் சோகமாக இல்லை. நான் கோபமாக இருக்கிறேன்.

என் குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள் என்று கோபமாக இருக்கிறது. அறிவாளிகள் இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும்”.

மேலும், பணியில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் வீதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அவர் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அருகில் கடமையாற்றிய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தலையிட முயன்றார், ஆனால் அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டு, போராட்டக்காரர்களால் வெளியேறுமாறு அங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளார்..

Share.
Leave A Reply