மத்­திய வங்­கியின் நாணயச் சபை­யா­னது  08 ஆம் திகதி நடை­பெற்ற அதன் கூட்­டத்தில் மத்­திய வங்­கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்­வ­ழங்கல் வட்டி வீதங்­களை  08 ஆம் திகதி நடை­மு­றைக்­கு­வரும் வகையில் 13.50 சத­வீ­தத்­திற்கும் மற்றும் 14.50 சத­வீ­தத்­திற்கும் அதி­க­ரிப்­ப­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளது.

அதன்­படி நாட்டின் வட்டி வீதங்கள் கணி­ச­மா­ன­ளவு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

கூட்டுக் கேள்வி கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டுதல், உள்­நாட்டு நிரம்பல் இடை­யூ­றுகள், செலா­வணி வீத தேய்­மானம் மற்றும் உல­க­ளா­விய ரீதியில் பண்­டங்­களின் உயர்­வ­டைந்த விலைகள் போன்­ற­வற்­றினால் உள்­நாட்டில் எதிர்­வரும் காலத்தில் பண­வீக்க அழுத்­தங்கள் மேலும் கடு­மை­ய­டையக் கூடுமென்­ப­தனைக் கரி­ச­னையில் கொண்டு மத்­திய வங்­கியின் நாணயச் சபை­யா­னது இந்த தீர்­மா­னத்தை எடுத்­துள்­ளது.

மேலும் பொரு­ளா­தா­ரத்தில் மேல­திகக் கேள்வித் தூண்டல் பண­வீக்க அழுத்­தங்கள் கட்டியெழுப்­பப்­ப­டு­வ­தனை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கும் மோச­மான பண­வீக்க எதிர்­பார்ப்­புக்கள் உயர்­வ­டை­வ­தனை முன்­கூட்­டியே தடுப்­ப­தற்கும் செல­வாணி வீதத்­தினை உறு­திப்படுத்துவதற்கும்  தேவைப்­படும் உத்­வே­கத்­தினை வழங்­கு­வ­தற்கும் வட்டி வீதக் கட்­ட­மைப்பில் அவதானிக்­கப்­பட்ட ஒழுங்­கீ­னங்­க­ளினைத் திருத்­தி­ய­மைப்­ப­தற்கும் கணி­ச­மான கொள்கைப் பதி­லி­றுப்பு இன்­றி­ய­மை­யா­தது எனும் கருத்­தினைக் கொண்டு  இந்த தீர்­மா­னம் மத்­திய வங்­கி­யினால் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் தற்­போது மத்­திய வங்­கி­யினால் வட்டி வீதம் 7 வீதத்­தி­லி­ருந்து 14 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.  இலங்­கையின் அண்­மைய வர­லாற்றில் இந்­த­ளவு தூரம் அதி­க­மான வகையில் வட்டி வீதம் இம்­மு­றையே  அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அதா­வது தற்­போது நாட்டில் காணப்­பட்டு வந்த வட்டி வீத­மா­னது இரண்டு மடங்­காக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.  இது மிகப்­பெ­ரிய ஒரு தீர்­மா­ன­மாக காணப்­ப­டு­கி­றது.

மத்­திய வங்­கியின் ஆளு­ந­ராக நந்­தலால் வீர­சிங்க பத­வி­யேற்று ஒரு சில மணி நேரங்­களில் நாணய சபை  கூடி இந்த தீர்­மா­னத்தை எடுத்­தி­ருக்­கி­றது.

இத­னூ­டாக ரூபாவின் பெறு­மதி ஸ்திர­மான நிலைக்கு வரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் வட்டி வீத­மா­னது இவ்­வாறு இரண்டு மடங்­காக அதா­வது 14 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்­டதன் விளை­வுகள் எவ்­வாறு அமையும் என்­ப­தையும் மத்­திய வங்கி இதனை அதி­க­ரித்­தது என்­ப­த­னையும்   பார்க்க வேண்­டி­யுள்­ளது.

அதா­வது இனி வரும் காலங்­களில் வங்­கி­களில் கடன் எடுக்­கின்­ற­வர்­க­ளுக்கு என்ன  நடக்கும்?  அதேபோன்று வங்­கி­களில் நீண்­ட­கால வைப்­பு­க்களை செய்­த­வர்­க­ளுக்கு என்ன நடக்கும் ? 

என்­பது தொடர்­பாக இங்கு ஆராய வேண்­டி­யது அவ­சி­ய­மா­யி­ருக்­கி­றது.  காரணம் வட்டி வீதம் நாட்டில் அதி­க­ரிக்­கும்­போது இந்த இரண்டு விட­யங்­க­ளிலும் அது  தாக்கம் செலுத்­து­வ­தாக அமையும்.

வட்­டி­வீத அதி­க­ரிப்­பா­னது சாதா­ரண மக்­களின் வாழ்க்­கையில் எவ்­வாறு தாக்­கத்தை செலுத்தும் என்­பது தொடர்­பா­கவே   பார்க்க வேண்­டி­யுள்­ளது.

அதா­வது வங்­கி­களில் மக்கள் பணத்தை  வைப்புச் செய்­யும்­போது அதற்­கான வட்டி வீதம் அதி­க­மாகக் கிடைக்கும்.

குறிப்­பாக நிலை­யான வைப்­பு­க­ளுக்கு 14 வீதத்­துக்கும் அதி­க­மான  அளவில் வட்டி கிடைப்­ப­தற்­கான சாத்­தியம் இருக்­கின்­றது.   இதனால் மக்கள் அதி­க­ளவில் தமது பணத்தை வங்­கி­களில் வைப்புச் செய்ய   முயற்­சிப்­பார்கள். 

அதே­போன்று கடன் வட்டி வீதமும் தற்­போது அதி­க­ரித்­தி­ருக்­கின்­றது.  14 வீதத்­துக்கும் அதி­க­ள­வி­லேயே கடன்­களை பெற வேண்­டிய ஒரு நிலைமை காணப்­ப­டு­கி­றது.

இது கடன்­பெறும் மக்­களின் ஆற்­றலை குறைக்கும்.  அதா­வது கடன் பெறும் ஆற்றல் குறைவு கார­ண­மாக அது நிதி பரி­மாற்­றத்தை குறைக்கும்.

இவ்­வாறு  வங்­கியில் வைப்பு செய்­வது அதி­க­ரித்து கடன் பெறு­வது குறை­யும்­போது நிதி பரி­மாற்றம் குறை­வ­டைந்து பண­வீக்கம்  குறை­வ­டையும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

காரணம்  பொருட்­களின் விலை உயர்வு மற்றும் அதி­க­ளவில் பொருள் கொள்­வ­னவு என்­ப­னவே பண­வீக்­கத்­துக்கு முக்­கிய கார­ணி­க­ளாகும். எனவே இதன் மூலம் பண­வீக்கம் குறை­வ­டையும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இந்த வட்டி வீத அதி­க­ரிப்­பா­னது ஏற்­க­னவே கடன்­களை பெற்றிருக்­கின்­ற­வர்­க­ளுக்கு அதா­வது வாக­னங்­களை குத்­த­கைக்கு எடுத்­தி­ருக்­கின்­ற­வர்கள்,  வீட்டுக் கடன்கள் உள்­ளிட்­ட­  கடன்­களைப் பெற்றுக் கொண்­ட­வர்­க­ளுக்கு என்ன நடக்கும் என்­பது பர­வ­லாக மக்கள் மத்­தியில் எழுப்­பப்­ப­டு­கின்ற கேள்­வி­யாக இருக்­கின்­றது.

மக்கள் வங்­கி­களில் கடன் பெறும்­போது நிலை­யான வட்டி விகி­தத்தில் கடன் அல்­லது மிதக்கும் வட்டி வீதத்தில் கடன் என்ற அடிப்­ப­டை­யி­லேயே தீர்­மா­னிக்­கப்­படும்.

அதா­வது நிலை­யான வட்டி அடிப்­ப­டையில் கடனை பெற்றால் தற்­போது இந்த  வட்டி அதி­க­ரிப்பின்  அடிப்­ப­டையில் வட்டி அதி­க­ரிக்­காது.

ஆனால் மிதக்கும் வட்டி வீதத்தின் அடிப்­ப­டையில் கடனைப் பெற்­றி­ருந்தால்  குறிப்­பிட்­ட­ளவில்  கடன்­களின்   வட்டி வீதம் அதி­க­ரிக்கும் சாத்­தி­யமே இருக்­கின்­றது. அதனை தவிர்க்க முடி­யாது.

ஆனால் கடன் பெற்­ற­வர்கள்  வங்­கி­க­ளுக்கு சென்று பேச்­சு­வார்த்தை நடத்த முடியும். குத்­தகை கடன்கள்  நிலை­யான வட்டி விகி­தத்தின் அடிப்­ப­டையில் வழங்­கப்­படும்.

அதனால் வாக­னங்­களை குத்­தகை அடிப்­ப­டையில் பெற்­ற­வர்கள் அந்தக் கடனை செலுத்­து­வது குறித்து அச்­சப்­பட வேண்­டி­ய­தில்லை.

ஆனால்  வீட்டுக் கடன்­களைப் பெற்றுக் கொள்­வது குறை­வ­டையும். காரணம் அதிக வட்டி என்­பதால் மக்கள் அதிக வட்­டியில் வீட்டுக் கடன்­களைப் பெற்றுக்கொள்­வ­தற்கு தயங்­கு­வார்கள்.  அது­மட்­டு­மன்றி சீமெந்து   கட்­டிடப் பொருட்­களின் விலை­களும் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன.

அதனால் சாதா­ரண மக்­கள் வீடு ஒன்றை நிர்­மா­ணிப்­பது என்ற கனவில் தற்­போது ஒரு சிக்கல் நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

வட்டி வீதமும் அதி­க­ரித்திருப்­பதால் வீட்டுக் கடனை பெற்று அந்தக் கடனை செலுத்­து­வது மக்­க­ளுக்கு கடி­ன­மாக இருக்கும்.

தற்­போது டொல­ருக்கு எதி­ரான ரூபாவின் பெறு­மதி 330 ரூபாய் வரை வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

இதனால் இந்த நிலை­யி­லேயே ரூபாவின் பெறு­ம­தியை ஸ்திரப்­ப­டுத்­து­வ­தற்கு இந்த வட்டி வீத அதி­க­ரிப்பு மூலம் வழி ஏற்­பட்­டி­ருப்­ப­தாக பொரு­ளா­தார நிபு­ணர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

மிக முக்­கி­ய­மாக டொலர் உள்­வ­ரு­கையை அதி­க­ரிப்­ப­தற்கு இந்த நட­வ­டிக்கை உறு­து­ணை­யாக அமையும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இலங்­கையில் வட்டி வீதம்  கடந்த காலங்­களில் மிகக்­கு­றை­வாக இருந்­ததன் கார­ண­மாக   நிறு­வ­னங்கள், தொழிற்­சா­லைகள்  உள்­நாட்டில் கடன்­களை பெற்று தமது செல­வு­களை செய்து கொண்­டி­ருந்­தன.

தற்­போது இலங்­கையில் வட்டி வீதம்  அதி­க­ரித்­தி­ருப்­பதால் உள்­நாட்டில் கடன்­களை பெறு­வது கடி­ன­மாக அமைந்து விடும்.

அதனால் இலங்­கையில் இருக்­கின்ற நிறு­வ­னங்கள் வெளி­நா­டு­களில் இருக்­கின்ற டொலர்­களை  இங்கே கொண்டு வரு­வ­தற்­கான சாத்­தியம் இருக்­கின்­றது.

அத்­துடன் வெளி­நா­டு­களில் இருக்­கின்ற இலங்­கை­யர்கள் உள்­ளிட்ட வெளி­நாட்­ட­வர்கள் கூட  இலங்­கையில் வங்­கி­களில் வைப்புச் செய்யும் சாத்­தியம் உள்­ளது. அதனால்  அந்­நிய செலா­வணி  உள்­வ­ருகை அதி­க­ரிக்­கலாம்.

இது அர­சாங்­கத்தின் எதிர்­பார்ப்­பாக இருக்­கின்­றது. ஆனால் இவ்­வா­றான நிலை ஏற்­ப­டு­வ­தற்கு   இலங்­கையில் பொரு­ளா­தார மற்றும் அர­சியல் ஸ்திரத்­தன்மை  உறு­தி­யாக இருக்­க­வேண்டும்.

நாட்டில் தற்­போது நில­வு­கின்ற   நெருக்­கடி நிலை இதற்கு சாத­க­மாக அமை­யாது.  அதே­போன்று இலங்கை தற்­போது சர்­வ­தேச நாணய நிதி­யத்­திடம் சென்று கடன் ­பெ­ற­வுள்­ளது. எனவே சர்­வ­தேச நாணய நிதி­யத்­திடம் கடன்­பெ­றும்­போது வட்டி வீதங்­களை அதி­க­ரிக்­கு­மாறு கோரும்.

அதனால் பொருத்­த­மான நேரத்தில் தேவை­யான ஒரு நட­வ­டிக்­கையை மத்­திய வங்கி எடுத்­துள்­ளது.  மிக முக்­கி­ய­மா­ன­தொரு கால­கட்­டத்தில் இக்­கட்­டான நெருக்­கடி மிக்க நேரத்தில் மத்­திய வங்­கியின் ஆளுநர் இந்த முடிவை எடுத்­தி­ருக்­கிறார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய ஐக்­கிய மக்கள் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பொரு­ளா­தார நிபுணர்  ஹர்ஷ டி சில்வா, வட்டி வீதத்தை அதி­க­ரிக்­கு­மாறு கோரி­யி­ருந்தார்.  அதன்­படி தற்­போது இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந­நி­லையில்  சக­லரும்  நாட்டின் பொரு­ளா­தார மற்றும் அர­சியல் ஸ்திரத்­தன்மை குறித்து கவனம் செலுத்­து­கின்­றனர்.

இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள மத்­திய வங்­கியின்  புதிய  ஆளுநர்  நந்­தலால்   வீர­சிங்க முக்­கிய விட­யங்­களை குறிப்­பிட்­டுள்ளார். அதா­வது மிக நெருக்­க­டி­யான காலகட்­டத்தில் இருக்­கின்றோம்.

மிக விரை­வாக   மாற்­றங்­களை  செய்­ய ­வேண்­டி­யுள்­ளது. அதற்கு முதற்­கட்­ட­மாக  நாட்டில் அர­சியல் மற்றும்  சமூக ஸ்திரத்­தன்மை பேணப்­ப­ட­வேண்டும்.

அவை தற்­போது நெருக்­க­டியில் இருக்­கின்­றன.  அவற்றை  மாற்­றி­ய­மைக்கும்  நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட ­வேண்டும். எனது தலை­மையில் மத்­திய வங்கி சுயா­தீ­ன­மா­கவும்   வெளிப்­படைத்  தன்­மை­யு­டனும் செயற்­படும்.

எனக்­கு ­எந்தவித­மான அழுத்­தங்­களும் வராது என்று நம்­பு­கின்றேன்.  அர­சாங்கம், எதிர்க்­கட்சி, மக்கள்  என  எனக்கு  ஆத­ரவு தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.  மத்­திய வங்­கியின் அடிப்­ப­டையே  சுயா­தீ­ன­மாக  செயற்­ப­டு­வது  அதனை நாங்கள் முன்­னெ­டுப்போம்.

சர்­வ­தேச  நாணய நிதி­யத்­து­ட­னான  பேச்­சு­வார்த்­தைகள்  விரை­வு­ப­டுத்­தப்­படும். நாட்டில் தற்­போ­தைய  நிதி  நெருக்­கடி நிலை­மையை  தீர்க்கும் நோக்கில் சர்­வ­தேச நாண­யநிதியத்­து­ட­னான  பேச்­சு­வார்த்­தைகள்  துரி­தப்­ப­டுத்­தப்­படும்.

நேற்று இர­வி­லி­ருந்தே சர்­வ­தேச  நாணய  நிதி­யத்­து­ட­னான பேச்­சுக்கள்  ஆரம்­பிக்­கப்­படும். அத­னூ­டாக இலங்­கைக்கு  பெற்­றுக்­கொள்ள முடி­யு­மான நிதி உதவி தொடர்பில் ஆலோ­சிக்­கப்­படும்.

இந்தப் பேச்­சு­வார்த்­தை­களை விரை­வாக நடத்­து­மாறு என்­னிடம்  கேட்­டுக்­கொண்டார்.   இந்த பேச்­சு­வார்த்­தைகள்   விரை­வு­ப­டுத்­தப்­பட்டு  தேவை­யான நட­வ­டிக்­கைகள்  எடுக்­கப்­படும்.

நாட்டு மக்கள் படு­கின்ற கஷ்­டங்­களை    பார்த்­து­விட்டே இந்த  சவால்­களை  ஏற்­றுக்­கொள்­வ­தற்கு  நான் இங்கு வந்தேன். ஒரே இரவில்  மாற்­றத்தை எதிர்­பார்க்க வேண்டாம். ஆனால் விரை­வாக     நிலை­மையில் முன்­னேற்ற நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்.

தற்­போது   இலங்கை பொரு­ளா­தார ம் தொடர்­பான  ஒரு உதா­ர­ணத்தை கூறு­கின்றேன்.  ஒரு வாகனம் வீதி­யி­லி­ருந்து விலகி பள்­ளத்தில் விழுந்து கொண்­டி­ருக்­கின்­றது.

முதலில் அவ்­வாறு  விழுந்து கொண்­டி­ருக்கும் வாகனம்  தரையில் விழு­வ­தற்கு முன்னர்  வேகத் தடை­யை­யிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். அதன் பின்­னரே  அதனை தூக்கி  எடுக்க வேண்டும்.

எனவே தற்­போது    வாகனம்  விழு­வதை  தடுப்­ப­தற்கே நட­வ­டிக்கை எடுக்­கின்றோம்.  அதன் பின்னர்   அதனை  தூக்கி எடுப்போம்.  எனவே ஒரு குறிப்­பிட்ட காலம் எமக்கு தேவை­யாக இருக்­கின்­றது.

மக்கள்  சற்று  பொறு­மை­யாக இருக்க வேண்டும்.  தேவை­யற்ற  எதிர்­பார்ப்­புக்­களை  உட­ன­டி­யாக ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டாம். ஆனால் என்னால்   மாற்­றத்தை  ஏற்­ப­டுத்த  முடியும்  என்று மத்­திய வங்­கியின் ஆளுநர் கூறி­யுள்ளார்.

இந்­நி­லையில் விரை­வாக தற்­போ­தைய நெருக்­க­டியை தீர்க்க வேண்டும்.  பொரு­ளா­தார மற்றும் அர­சியல் நெருக்­க­டிகள் தீர்க்­கப்­பட வேண்டும்.

அர­சியல் நெருக்­கடி தீர்க்­கப்­பட்டால்  மட்­டுமே  பொரு­ளா­தார நெருக்­க­டியை தீர்க்க முடியும்.  இந்­நி­லையில் வட்டி வீதங்கள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. அதிகரிக்கப்பட்டுள்ளன. அடுத்து பொருளாதாரத்தில் என்ன நடக்கும் என்பதனை பார்க்கலாம்.

ரொபட் அன்­டனி 

Share.
Leave A Reply