ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் படுத்து கொண்டு தபித்து, பதற்றமின்றி தொடர்ந்து போன் பேசிய வீடியோ காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் போன் பேசிக்கொண்டே செல்ல, ரயில் வந்த போது அதிர்ஷ்டவசமாக அந்த பெண் தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பினார்.

அதன் பிறகு எதுவும் நடக்காதது போல் சர்வ சாதரணமாக செல்போனில் தொடர்ந்து பேசிக் கொண்டே தண்டவாளத்தில் இருந்து எழுந்து சென்ற வீடியோ காட்சி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுத்தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் அந்த பெண் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என கூறப்படுகிறது.

Share.
Leave A Reply