மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்று, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தயார் என முன்னாள் பிரதமரும், ஐக்கியதேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று (17.04.22) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் கோரிக்கைக்கு அமைய ஒட்டுமொத்த அரசாங்கமும் விலக வேண்டும். மக்கள் உண்மையில் என்னை விரும்பினால், இடைக்கால அரசாங்கத்துக்கு குறுகியக் கால தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தயாராகவே இருக்கிறேன் எனவும் தெரிவித்தார். தற்போதைய நெருக்கடி நிலைமைகளை ஒன்றரை வருடங்களுக்கு தீர்க்க முடியும் எனவும் ரணில் கூறியுள்ளார்

Share.
Leave A Reply