ரஷ்யாவின் விமானப்படை மூலம், ஒரே இரவில் உக்ரைனின் 16 ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உக்ரைனில் கடந்த 7 வாரங்களுக்கு மேலாக ரஷ்யப் படைகளுக்கும், உக்ரேனிய படைக்குமிடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில், ரஷ்யப் படைகள் தொடர்ந்து உக்ரைன் பொதுமக்களை கொன்று குவித்து வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது.

ஆனால், ரஷ்யாவோ உக்ரைனின் குற்றச்சாட்டை ஐ.நா-வில் தொடர்ந்து மறுத்துவருகிறது. இதுமட்டுமல்லாமல், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, உலகில் 170 கோடி மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்

ஒரே இரவில் 16 உக்ரைன் ராணுவ தளங்கள் அழிப்பு

இந்த நிலையில், ரஷ்யாவின் விமானப்படை மூலம், ஒரே இரவில் உக்ரைனின் 16 ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், ரஷ்ய ராணுவப் படை விமானத்தின் மூலம் அனுப்பப்பட்ட ஏவுகணைகள் மூலம், உக்ரைனின் 1 எரிபொருள் கிடங்கு, 3 வெடிமருந்து கிடங்குகள் மற்றும் 5 கட்டளை நிலையங்கள் உட்பட உக்ரைனின் 16 ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply