யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் புகையிரத பாதையை கடக்க முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் பயணித்த புகையிரதம் மோதியே சிப்பாய் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி தம்புதோட்ட இராணுவ முகாமை சேர்ந்த ஏழாவது விஜயபாகு ரெஜிமென்ட்டில் கடமையாற்றும் குருநாகல் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோப்ரல் டபுள்யு.எம்.எஸ் சமன் குமார (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்

Share.
Leave A Reply