ரஷியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த ஆயுதம் சாத்தான்-2 (சர்மாட்) என்று அழைக்கப்படுகிறது. ரஷியாவின் அடுத்த தலைமுறை ஏவுகணைகளில் ஒன்றாக உள்ளது. அதிபர் புதினின் வார்த்தைகளின்படி, இது “வெல்லமுடியாத ஆயுதம்” என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஏவுகணை(ஆயுதம்), அணுசக்தி பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை ஒரு குறுகிய ஆரம்ப ஊக்க சக்தியுடன் செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், எதிர் ஏவுகணை தாக்குதலை தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 200 டன் எடை கொண்டது.

ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “சர்மாட் என்பது உலகின் மிக நீண்ட தூர இலக்குகளை அழிக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணையாகும்.

ஒரே ஏவுகணையில் 10 வார் ஹெட்களை வைக்க முடியும். இதனால் அதிக அளவிலான சேதங்களை இது ஏற்படுத்தும்.

ரஷ்யா இந்த ஏவுகணையை 2000ம் தொடக்கத்திலேயே உருவாக்கிவிட்டது.அதன்பின் பல புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி இதை ரஷ்யா தொடர்ந்து அப்டேட் செய்து வந்தது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த ஏவுகணை எதிரி நாட்டின் ஆண்டி மிஸைல் ஏவுகணை சிஸ்டத்தை தாண்டி தாக்க கூடியது.

வடக்கு ரஷியாவில் உள்ள பொலெசெட்ஸ்க் காஸ்மோட்ரோமில் சோதனை “வெற்றிகரமாக” நடந்தது.

இந்த ஏவுகணை நமது நாட்டின் அணுசக்தி படைகளின் போர் ஆற்றலை கணிசமாக அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் போர் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ரஷியாவின் கோரிக்கைகள் குறித்த வரைவு அறிக்கையை உக்ரைனிடம் அளித்துள்ளதாகவும், அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக, ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது:

அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக முற்றிலும் தெளிவான மற்றும் விரிவான விளக்கங்களுடன் வரைவு அறிக்கையை உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளோம். தற்போது முடிவு அவர்களின் கைகளில் உள்ளது.

அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததற்கு உக்ரைன் தான் காரணம்.

முன்னர் ஒப்புக் கொண்ட ஒப்பந்தங்களில் இருந்து உக்ரைன் விலகி வருகிறது. பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்த உக்ரைன் விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply