உக்ரேனிய ராணுவ வீரர் மீது ரஷ்ய துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, அவர் உடலை துளைக்க வந்த 7.62 மிமீ புல்லட்டிலிருந்து அனைத்து சேதங்களையும் தடுத்து அவர் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது அவரது செல்போன்.
ரஷ்ய – உக்ரைன் போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரேனிய ராணுவ வீரர் ஒருவர் மீது ரஷ்ய துருப்புகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
ஆனால் அந்த வீரருக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. குண்டு துளைக்காத ஆடை அவர் உயிரைக் காக்கவில்லை. மாறாக அவர் பையில் இருந்த செல்போன்தான் அவர் உயிரைக் காப்பாற்றியுள்ளது.
அவர் உடலை துளைக்க வந்த 7.62 மிமீ புல்லட்டிலிருந்து குறுக்கே இருந்த செல்போன் அனைத்து சேதங்களையும் தடுத்து அவர் உயிரைக் காப்பாற்றியுள்ளது.
செல்போனில் சிக்கிய புல்லட்டை எடுத்துக் காட்டி அந்த வீரர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மகிழ்ச்சியுடன் தனது மொபைல் போனைக் காட்டுகிறார். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்கும் வேளையில், தனது சக போராளியுடன் கலகலப்பாகப் பேசும்போது, சிப்பாய் வீடியோ எடுத்ததாகத் தெரிகிறது.
அந்த வீடியோவில் தன் செல்போனைக் காட்டி, “ஸ்மார்ட்போன் என் உயிரைக் காப்பாற்றியது” என்று கூறுகிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
This #Ukrainian soldier is saved by his mobile phone, as he shows the bullet wedged into the rear case of the phone #UkraineRussiaWar #Ukraine #RussiaUkraineWar pic.twitter.com/mzuAhCc0GI
— Globe Sentinel (@GlobeSentinels) April 18, 2022