இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஐக்கிய மக்கள் சக்தியினரும், அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 39 பேர் கொண்ட குழுவினரும் ஆரம்பக்கட்ட இணக்கப்பாட்டை எட்டியுள்ளனர்.

இடைக்கால அரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்பினை உருவாக்குவது தொடர்பில் முன்னேற்றகரமான இருதரப்பு பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார,ஹர்ச டி சில்வா, கயந்த கருணாதிலக, எஸ்.எம் மரிக்கார் ஆகியோருக்கும் அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 39 பேர் அடங்கிய குழுவின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதயகம்மன்பில, தயாசிறி ஜயசேகர, டிரான் அழஸ் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது.

முழு அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு முழு நாட்டு மக்களும் ஒன்றினைந்து வலியுறுத்துகிறார்கள்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின வெற்றிக்கொள்ளும் வகையில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.

சமூக கட்டமைப்பி;ல் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சகல கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

இடைக்கால அரசாங்கத்தின் 21ஆவது திருத்தத்தை விரைவாக நிறைவேற்றி குறுகிய காலத்தில் பொதுத்தேர்தலை நடத்துவது பிரதான இலக்காக உள்ளது.

இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்து தொடர்பில் சுயாதீன குழுக்களின் தரப்பினருடன் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டுமாயின் 113 பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்த வேண்டும்,நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிப் பெற்றால் அதனை தொடர்ந்து ஸ்தாபிக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஒன்றினைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்வைத்த இரண்டு நிபந்தனைகள் குறித்து இச்சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டது.

Share.
Leave A Reply