தறிபோதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் என்பது இளைஞர்கள் மட்டுமல்லாமல் அனைவரின் முக்கிய தேவையாக மாறிவிட்டது.

அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே ஸ்டார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஸ்மார்ட்போன் பயன்பாடு மாணவர்களிடையே பல சர்ச்சைகளை ஏற்படுத்தவும் தவறுவதில்லை.

கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளில் இருந்த மாணவர்கள் தற்போது பள்ளிகளில் நேரடி வகுப்பில் படித்து வருகின்றனர்.

இந்த நேரடி வகுப்பில் மாணவ மாணவிகள் செய்யும் அட்டகாசங்கள் அவ்வப்போது வீடியோவாக வெளியாகி பெற்றோர்கள் மட்டுமல்லாது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

வகுப்பில் நடனமாடுவது. ஆசிரியர் கண்டித்தால் அவரையே மாணவர்கள் தாக்குவது உள்ளிட்ட பல சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது மாணவிகளின் மடியில் படுத்துக்கொண்டு மாணவர்கள் மொபைல்போன் பயன்படுத்துவது போன்ற வீடியோ பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில். மதிக உணவு இடைவேளையின் போது வகுப்பறையில் பல மாணவர்கள் ஸ்மார்ட்போனில் கேம் விளையாடும்போது ஒரு சில மாணவர்கள் மாணவிகளின் மடியில். தலை வைத்துக்கொண்டு செல்போன் பயன்படுத்துகின்றனர். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

ஏற்கனவே 12-ம் வகுப்பு மாணவர்கள் 11-ம் வகுப்பு மாணவர்களை ரேக்கிங் செய்வது போன்ற வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில். தற்போது இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ பார்வையிட இங்கே அழுத்தவும்

Share.
Leave A Reply