சீனாவில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்கள், இலங்கை சிறுவர்களுக்கு சுமார் ரூ11 லட்சம் நிதி அளித்துள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததும், பிற நாட்டுக்கு கரன்சிக்கு நிகரான இலங்கை கரன்சியின் மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகிறது. இந்நிலையில் தான் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியதற்கு பல்வேறு பிரச்சினைகள் முக்கிய காரணிகளாக உள்ளன.

கொரோனா பாதிப்பால் வந்த ஊரடங்கு, வேலையிழப்பு, வெளிநாட்டு கடன் அதிகரிப்பு, பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது,

எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்டவை தான் முக்கிய காரணமாக கூறப்படுகின்றன. இதனால் தான் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

இந்தநிலையில் இலங்கை நாட்டின் ஏழை குழந்தைகள் 1000 பேரின் கல்வி செலவுகளுக்காக சீனாவில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்கள் சுமார் ரூ11 லட்சம் நிதி (5 million) அளித்துள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தகவலை கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply