ரஷ்ய கடற்படை தளத்தின் செயற்கைகோள் படங்களை ஆதாரமாகக் கொண்டு, ரஷ்யா டால்பின்களைக் களமிறக்கி உள்ளதாக அமெரிக்க கடற்படை நிறுவனம் (USNI) அறிக்கையில் தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பு பிப்ரவரியிலேயே இந்த டால்பின்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை தளத்தைப் பாதுகாக்க டால்பின்களை களமிறக்கியுள்ளது அந்நாடு.

ரஷ்ய கடற்படை தளத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பல்கள், உக்ரேனிய ஏவுகணைகளை நெருங்க முடியாத அளவுக்கு வெகு தொலைவில் உள்ளன.

இதனால் ரஷ்யா நீருக்கடியில் எளிதாகத் தாக்கப்படக்கூடிய சூழல் அதிகம். அப்படியான தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க, அங்கு டால்பின்கள் களமிறக்கி விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டால்பின்களை ரஷ்ய ராணுவம் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், எக்கோலொகேஷன் (Echolocation) என்று அழைக்கப்படும், ஒலி அலைகள் மூலம் தொலைதூர அல்லது கண்ணுக்குத் தெரியாத பொருள்களை மிகவும் துல்லியமாகக் கண்டறியும் இயற்கையான திறனை அவை கொண்டுள்ளன என்பதுதான்.

கடல் வழியாகச் செல்லும்போது ஒலியால் வழியறியும் இயற்கையான சோனார் திறனையும் டால்பின் கொண்டுள்ளதால், கடற்படை தளத்தை பாதுகாக்க டால்பின்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ரஷ்ய கடற்படை தளத்தின் செயற்கைகோள் படங்களை ஆதாரமாகக் கொண்டு, ரஷ்யா டால்பின்களை களமிறக்கி உள்ளதாக அமெரிக்க கடற்படை நிறுவனம் (USNI) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பு பிப்ரவரியிலேயே இந்த டால்பின்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கருங்கடலை தளமாகக் கொண்ட ரஷ்யாவின் மிக முக்கியமான கடற்படையான செவாஸ்டோபோல் துறைமுகத்தின் நுழைவாயிலில், இரண்டு மிதக்கும் டால்பின்கள் காவலுக்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply