யாழ். பண்டத்தரிப்பு பகுதியில் சாமி அறையில் சேமித்து வைத்திருந்த பெட்ரோல் மீது தீப்பற்றியதில் 17 வயது மாணவி உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, சாமி படத்துக்கு விளக்கேற்றிவிட்டு வீசிய தீக்குச்சி சாமி அறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் மீது பாட்டு வீடு தீப்பற்றி உள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவியான சுதர்சன் சுதர்சிகா என்ற 17 வயது மாணவியை உயிரிழந்துள்ளார்.

சாமி அறையில் பெட்ரோல் நிரப்பிய கான்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கம்போல் இன்று மாலை குறித்த மாணவி சாமி அறையில் விளக்கேற்றி விட்டு தீக்குச்சியை கீழே வீசியுள்ளார்.

அதிலிருந்து பறந்த தீப்பொறி பெட்ரோல் மீது பட்டு வீடு தீப்பற்றி எரிந்து உள்ளது

Share.
Leave A Reply