நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த ஆணையை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தள்ளது.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் தற்போது அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.