இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று அறியப்படுவோர் இன்று வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

போராட்டத் திடலில் ஒரு கூடாரம் தீவைப்பில் எரிவதைப் பார்க்க முடிந்தது.

போராட்டக் காரர்கள், அவர்களைத் தாக்கும் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என இரு தரப்பினர் மீதும் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசுகின்றனர்.

ராஜபக்ஷ ஆதரவாளர்கள் பத்திரிகையாளர்களையும் தாக்கினர்.

இலங்கையில் நடந்து வரும் இந்த சம்பவங்களை பிபிசி தமிழுக்காக பணியாற்றும் செய்தியாளர் ரஞ்சன் அருண்பிரசாத் ஃபேஸ்புக் நேரலையாக வழங்கிவருகிறார்.

Share.
Leave A Reply