உடன் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு மற்றும் கொழும்பு மத்திய பகுதிகளுக்கு குறித்த ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு காலிமுகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கே குறித்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply