1. இலங்கையில் ஏற்பட்ட வன்முறையில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மொத்தம் 231 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  2. இலங்கையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு அனுமதி அளித்துள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
  3. இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
  4. இலங்கை மக்கள் வன்முறையை கைவிட்டு, அமைதி காக்க வேண்டும் என்று அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
  5. இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகிய மஹிந்த ராஜபக்ஷ தஞ்சமடைந்திருப்பதாக கருதி, திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
  6. இந்தோனேஷியாவில் நடைபெற உள்ள ஆசியா ஹாக்கி கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திக், மாரீஸ்வரன் இடம் பெற்றுள்ளனர்.
  7. இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் நேற்று அளித்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  8. இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
  9. இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய தீ காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  10. புதுச்சேரி ஜிப்மரின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என, ஜிப்மர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
  11. இலங்கையில் ஆளும் கட்சி எம்.பி.க்கள், அரசு ஆதரவாளர்கள் வீடுகளுக்கு நேற்று போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.
  12. கோட்டாபய ராஜபக்ஷவின் பூர்வீக இல்லத்திற்கும் தீ வைக்கப்பட்டது.
  13. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயது சிறுமி உயிரிழந்தார்.
  14. இந்திய சந்தூர் இசைக் கலைஞர் சிவ் குமார் சர்மா காலமானார். பிரதமர் மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
  15. இந்தியா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சாந்தனுக்கு 3வது நாளாக மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
  16. இலங்கை சூழல் இந்தியாவிலும் விரைவில் ஏற்படும் என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
  17. காஞ்சிபுரத்தில் பட்டுநூல் விலை உயர்வை குறைக்க கோரி 300க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள், உற்பத்தியாளர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  18. தமிழ்நாடு பாஜகவினர் வரும் 2024 மக்களவைத் தேர்தல் வியூகம் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மதுரையில் இன்று நடைபெறுகிறது.
  19. இந்தியாவிலேயே பாதுகாப்பான, அமைதியான மாநிலம் தமிழ்நாடு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  20. இலங்கை கொழும்புவில் சீனியர் டிஐஜி மக்கள் கூட்டத்தால் தாக்கப்பட்டார்.
  21. சென்னைக்கு வந்த விமானத்தில் 47.56 லட்ச ரூபாய் மதிப்புள்ள, ஒரு கிலோ எடையிலான 6 தங்க ஸ்பேனா்களை கடத்தி வந்த பயணியை சுங்கத்துறையினா் கைது செய்தனர்.
  22. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இருசக்கர வாகனங்களை ஏற்றி சென்ற சரக்கு லாரி மீது கரிதொட்டி லாரி மோதியதில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன.
  23. கோவைக்கு போதைப் பொருள் கடத்திய உகாண்ட பெண் சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
  24. இலங்கை காலி ரத்கம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர்.
  25. கர்நாடகத்தில் மதம் சார்ந்த அல்லது பிற இடங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த புதிய விண்ணப்பத்தினை வரும் 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
Share.
Leave A Reply