“கோட்டா கோ கம” மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வருகின்றது.
குறித்த போராட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்று குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளனர்.
நாட்டில் கடந்த 6 ஆம் திகதி முதல் அவசரகாலச்சட்டம் நடைமுறையில் உள்ளது. அத்துடன் கடந்த 9 ஆம் திகதி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.
இந்நிலையில், குறித்த சட்டங்களின் படி பொது இடங்களில் பொது மக்கள் ஒன்று கூட முடியாதெனவும் அவ்வாறு பொது மக்கள் ஒன்று கூடும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென குறித்த இடத்தில் வைத்து பொலிஸாரினால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.