இலங்கை மக்களுக்கு உதவும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் தமது மாத சம்பளத்தை தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் இன்று கையளித்துள்ளனர்.

இந்திய ரூபாயில் 1.3 கோடிக்கான காசோலை தமிழக முதல்வரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் துரை முருகன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொறடா கோ.வி.செழியன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முதல்வரிடம் காசோலையை வழங்கிவைத்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, தமிழக அரசின் ஏற்பாட்டில் இலங்கை மக்களுக்கு அனுப்பும் வகையில் தயார் செய்யப்பட்ட பொருட்களை பொதியிடும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது.

”தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்” எனும் வாசகம் குறித்த பொதிகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதியின் பின்னர் சென்னை துறைமுகத்திலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பொருட்களை கப்பலில் அனுப்பி வைக்கவுள்ளார்.

 

Share.
Leave A Reply