முதலிரவு” முடிந்ததுமே.. பிளான் போட்ட “கட்சி தலைவர்”.. அழுதுகொண்டே போலீசுக்கு போன பெண்.. என்னாச்சு
ஹைதராபாத்: கட்சிக்கார பெண்ணை ஏமாற்றி நாசம் செய்துள்ளார் ஒரு காங்கிரஸ் பிரமுகர்.. இப்போது போலீஸ் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ் ஹைதராபாத்தை சேர்ந்தவர் பிரபல காங்கிரஸ் கட்சி பிரமுகர் கும்பம் சிவகுமார் ரெட்டி.. இவர் நாராயணபேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இந்த பகுதியில் மிகவும் பிரபலமான கட்சி தலைவரும்கூட.. இவர்மீது ஒரு இளம்பெண் அளித்துள்ள பாலியல் புகார் பெரு அதிர்ச்சியை கூட்டி வருகிறது
இளம்பெண்
கடந்த 2020-ல் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் பிரமுகர் ஒருவருடன் சிவகுமார் ரெட்டிக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.. கட்சியின் நடவடிக்கைகளுக்காக அவரை அந்த பெண் அடிக்கடி சந்தித்துள்ளாராம்.. அப்போது அந்த பெண் சிவக்குமாரை அதிகமாக கவர்ந்துவிட்டதாக தெரிகிறது.. இதனால், அந்த பெண்ணை அடைய முயற்சித்துள்ளார்.. அதற்காக தனிமையில் பலமுறை சந்திக்க முயற்சியும் செய்துள்ளார்.
கல்யாண ஆசை
அதன்படியே ஒருநாள் பெண்ணை தனிமையில் சந்தித்து பேசியிருக்கிறார்.. அப்போது, உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? என்று கேட்டுள்ளார்..
அதற்கு அந்த பெண் இல்லை என்று சொல்லிவிட்டு, ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டார்.. அதற்கு அந்த மாவட்ட தலைவர், “எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. ஆனால், என் மனைவிக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போயிடும்.. ரொம்ப சீரியஸா இருக்கார்..
இன்னும் 3 வருஷத்துல அவர் இறந்துடுவார்.. அதுக்கு மேல உயிர் தாங்காது.. அதனால உங்களையே கல்யாணம் செய்துக்க ஆசைப்படறேன்” என்று பேசியுள்ளதாக தெரிகிறது.
கரைந்த பெண்ணின் மனது அந்த தலைவரின் கண்ணீர் பேச்சு, பெண்ணின் மனதை கரைத்துவிட்டதாக தெரிகிறது.. பரிதாபம் ஏற்பட்டுள்ளது.. இரக்கம் பீறிட்டு வந்துவிட்டது..
இதை உணர்ந்த அந்த தலைவரும், நீதான் என் மனைவி என்று பேசி பேசியே அந்த பெண்ணை சம்மதிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது..
ஒருகட்டத்தில் அப்பெண்ணுக்கு இந்து முறைப்படி தாலியும் கட்டிவிட்டார்.. கல்யாணம் முடித்த கையோடு, அந்த பெண்ணை பஞ்சகுட்டாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அப்போது அந்த பெண்ணுக்கே தெரியாமல் ஆபாச வீடியோ எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
ஆபாசம்
அதற்கு பிறகுதான் தலைவர், தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார்.. இந்த வீடியோக்களை காட்டி காட்டியே, சோஷியல் மீடியாவில் வெளியிட போவதாக மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்துவிட்டாராம்.. இதற்கு பிறகுதான் அந்த பெண் போலீசுக்கு வந்து புகார் தந்துள்ளார்.. மேற்கண்ட நடந்த சம்பவங்களை எல்லாம் புகாராகவும் எழுதி கொடுத்துள்ளார்.. இப்போதுகூட அந்த தலைவர் விடவில்லையாம்..
சலசலப்பு – பரபரப்பு
அவரிடம் இருந்து விலக முயற்சித்தும்கூட, தொடர்ந்து தன்னை மிரட்டி கொண்டே இருக்கிறாராம்..
கல்யாணம் என்ற வார்த்தையை சொல்லி சொல்லியே பலமுறை மிரட்டி வந்ததாக பெண் கூறியதையடுத்து, நாராயணரெட்டி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மீது பஞ்சாகுட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்… இந்த சம்பவம் அம்மாநில காங்கிரஸ் கட்சியில் பெரும் அதிர்ச்சியை கூட்டி வருகிறது.