உக்ரைனின் கார்கிவ் (Kharkiv) நகரிலிருந்து ரஷ்யப் படைகள் வௌியேறியுள்ளன.

ரஷ்ய எல்லை நோக்கி அந்தப் படைகள் பின்வாங்கியுள்ளதாக கார்கிவ் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் வடகிழக்கே அமைந்துள்ள, முக்கியத்துவம் வாய்ந்த கார்கிவ் நகரத்தின் சிறிய பகுதிக்குள் மாத்திரமே ரஷ்ய படைகளால் நுழைய முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ரஷ்ய படைகள் வௌியேறியதையடுத்து, அங்கு அமைதி நிலவுவதாகவும் மக்கள் தமது வீடுகளுக்கு மீளத்திரும்புவதாகவும் கார்கிவ் நகர மேயர் கூறியுள்ளார்.

அத்துடன் அனைத்து மக்களுக்கும் நீர், எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றை விநியோகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், மக்களின் குடியிருப்புக் கட்டடங்கள் ஏராளமானவை நிர்மூலமாகி அல்லது சேதமாகிப் போயுள்ளதாகவும், எதிர்காலத்தில் பாரியளவிலான மீள் கட்டுமானங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளதாகவும் கார்கிவ் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply