தவளக்குப்பத்தில் கணவர், குழந்தையை தவிக்க விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

தவளக்குப்பத்தில் கணவர், குழந்தையை தவிக்க விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண் குழந்தை
தவளக்குப்பம் வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவரது மனைவி தமிழரசி (26). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் சக்திவேல் பெங்களூருவில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வார்.

இந்த நிலையில் தமிழரசிக்கு திருமணத்திற்கு முன்பே தனது உறவினரான சதீஷ்குமார் (32) என்பவருடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கும் பிறகும் சதீஷ்குமாருடனான பழக்கத்தை கைவிடவில்லை. இதுகுறித்து அறிந்த சக்திவேலின் குடும்பத்தினர் தமிழரசியை கண்டித்தனர்.

காதலனுடன் ஓட்டம்
சம்பவத்தன்று வீட்டில் இருந்து தமிழரசி திடீரென மாயமானார். இதுகுறித்து தகவல் அறிந்த சக்திவேல் உடனடியாக சொந்த ஊருக்கு திரும்பினார்.

தமிழரசியை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார். அப்போது தான் அவர் காதலன் சதீஷ்குமாருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.

இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் சக்திவேல் புகார் செய்தார். அதில் தமிழரசி அவரது காதலர் சதீஷ்குமாருடன் சென்று இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply