யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தொன்றில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்று இரவு 10.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரு மோட்டார் சைக்கிளில் மூவரும் , மற்றுமொரு மோட்டார் சைக்கிள் இருவரும் பயணித்த நிலையில் இரு மோட்டார் சைக்கிள்களும் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர் எதிரே மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துநர்கள் இருவர் மற்றும் அதில் பயணத்த மற்றுமொருவர் ஆகிய மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
17, 23 மற்றும் 25 வயதுகளையுடைய சுன்னாகம், கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் இரண்டும் தீ பற்றி எரிந்த நிலையில் அயலவர்கள் கூடி தீயினை அணைத்து , பாடுகாயமடைந்த மூவரை நோயாளர் காவு வண்டியை அழைத்து வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர்.