கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்தி அவரின் வயிற்றில் இருந்த குழந்தையை கொலை செய்ததாகக் கூறப்படும் கணவரை , பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான 26 வயதான கணவர் போதைவஸ்துக்கு அடிமையானவர் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கத்திக்குத்துக்கு இலக்காக, வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெரோயின் போதைவஸ்து பாவித்த விட்டு, கடந்த 17ஆம் திகதி மாலை 4 மணி அளவில் வீடு வந்த சந்தேகநபர், மனைவியுடன் சண்டையிட்டு அவரை கத்தியால் குத்திவிட்டு தலைமறை வாகியுள்ளார். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.