ஐ நா உயர் ஆணையரின் பரிந்துரைகளுக்கு கவனம் தந்து, நாம் தமிழர்களுடன் நிற்க வேண்டும் என்று பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் சர் கீர் ஸ்டாமர், மே18 ஆம் தேதி நிகழ்வுக்கான நினைவேந்தலில் பேசியுள்ளார்.

மேலும், “இறுதிக்கட்ட போரில் குற்றம் இழைத்தவர்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்” என்று பிரிட்டன் அரசுக்கு அழுத்தம் தரும் விதமாகப் பேசியுள்ளார்.

அத்துடன், “இறுதிக்கட்டபோரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கட்சி நினைவுகூர்கிறது. அந்த நிகழ்வின் பின்னணி உண்மை, அதற்கான பொறுப்பேற்பு மற்றும் நல்லிணக்கத்துக்கான தேவையை நமக்கு நினைவூட்டும் விதமாகவே இந்த நினைவு தினம்” என்றும் அவர் பேசியுள்ளார் .

“13 ஆண்டுகளகியும் இந்த விவகாரத்தில் இன்னும் நீதி வழங்கப்படவில்லை. அந்தப்போரில் கொல்லப்பட்டவர்களுக்கும், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டு இன்று வாழ்ந்துவருவோருக்கும் நீதி கிடைக்க, தொழிலாளர் கட்சி இந்த விவாகரத்தில் மறுபரிசீலனை செய்கிறது” என்று பேசியதாக `தி ஐலேண்ட் ஆன்லைன்` தளத்தில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For your reference sir – Pl del once confimed: https://island.lk/uk-opposition-leader-suggests-taking-lanka-to-intl-criminal-court/

Share.
Leave A Reply