பெற்றோல் தட்டுப்பாட்டால் வாகனங்கள் கிடைப்பதில் தாமதம் – வயிற்று வலியால் சிறுவன் மரணித்த சோகம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை டீசைட் தோட்டத்தைச் சேர்ந்த தரம் 4 இல் கல்வி பயிலும் 8 வயது மாணவன் கடந்த சனிக்கிழமை(21) காலை வயிற்று வலியால் துடிதுடித்து மரணித்துள்ளதாக அவரது பாட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவனது பாட்டி கூறுகையில்,

வயிற்று வலி காரணமாக தனது மகளின் ஒரே மகனை (8வயது) வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல என்னால் இயன்றவரை முச்சக்கர வண்டி , வாகணங்களைத் தேடியலைந்த போதும் எரிபொருள் இல்லாத காரணத்தால் ஒரு வாகணமும் கிடைக்காத நிலையில் 1990 அம்புயூலன்ஸ் மூலம் கொண்டு செல்ல எத்தனித்த போது அம்புயூலன்ஸில் வந்தவர் சிறுவனை பரிசோதனை செய்த போது, சிறுவன் இறந்து விட்டதாகக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பல சிரமங்களுக்கு மத்தியில் முச்சக்கர வண்டி மூலம் வைத்தியசாலையில் அனுமதித்த போது சிறுவன் இறந்து விட்டதால் , சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு பரிசோதனைகாக அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு சிறுவனின் உடல் சட்ட வைத்திய அதிகாரியின் முன்னால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சிறுவனின் பாட்டி தெரிவித்தார்.

சிறுவனின் தந்தை சிறையில் உள்ளதாகவும் தாய் தோட்டத்தில் வேலை குறைவால் கொழும்பில் பணி புரிந்ததாகவும் குறித்த சிறுவனின் பாட்டி மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply