அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூலத்தை விரைவில் நடைமுறைப்படுத்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக, செய்தி வெளியாகியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மே 27ஆம் தேதி மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அச்செய்தியில், “21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கட்சித் தலைவர்களின் அவதானிப்பு மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது தற்போதைக்கு முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்ட நகலை நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டு கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதற்கிடையே 21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான மேலதிக விளக்கங்கள் தேவைப்படுவோர் நீதி அமைச்சரைத் தொடர்பு கொண்டு அதனைப் பெற்றுக் கொள்ள முடியுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply