வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நீராடச் சென்ற 16 வயது மாணவன் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – மீராவோடை புளியடித்துறை ஆற்றுக்கு நீராடச் சென்ற போதே இந்த சம்பவம் இன்று மாலை (29) இடம்பெற்றுள்ளது.
மீராவோடை பகுதியில் உள்ள பாடசாலையில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்று வரும் எம்.எச்.அர்ஹம் என்ற மாணவன் தனது நண்பர்களோடு சேர்ந்து நீராடும் போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து குறித்த மாணவனின் சடலத்தை கல்குடா சுழியோடிகள் நீண்ட நேரமாக தேடி மீட்டெடுத்தனர்.
மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.