கொழும்பு, பெஸ்டியன் மாவத்தை பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இன்று (30) திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது 30 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply