இந்த சம்பவம் இன்று காலை கரணவாய் மண்டாண் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதில், கரணவாய் பகுதியை சேர்ந்த பானுஜன் வயது 17 என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)

