யுவதியின் தொலைபேசி இலக்கத்தை கேட்டதாக கூறி வைத்தியர் ஒருவர் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர் சிகிச்சைக்காக தாத்தாவை அழைத்து வந்த யுவதியிடன் தொலைபேசி இலக்கத்தை தருமாறு கேட்டதால் யுவதியின் உறவினர்களால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் இன்று பிற்பகல் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு தாத்தாவை சிகிச்சைக்காக 22 வயதுடைய யுவதி அழைத்து வந்துள்ளார்.
தாத்தாவை சிகிச்சை பார்த்த வைத்தியர் யுவதியிடம் தொலைபேசி இலக்கத்தை கேட்டுள்ளார். அதற்கு யுவதி தொலைபேசி இல்லை எனக் கூற தனது தொலைபேசி இலக்கத்தை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக யுவதி வைத்தியசாலைக்கு வெளியே தனது உறவினரான ஆட்டோ ஓட்டுநர்களிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநர்களால் நையப்புடைக்கப்பட்டார். இதனையடுத்து கொடிகாமம் பொலீஸார் குறித்த இடத்திற்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்டனர்.