வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் இன்று (03) மதியம் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் இருந்து தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் பூவரசன்குளம், நித்தியநகர் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றிற்கு சென்றுள்ளார்.
அங்கு சிறுமியை நிறுத்திவிட்டு தாய் கச்சான் அறுவடை செய்து கொண்டிருந்த போது விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
கச்சான் அறுவடை செய்து கொண்டிருந்த தாயார் சிறுமியை காணவில்லை என தேடிய போது சிறுமி தண்ணீர் தொடர்டியில் விழுந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுமியை மீட்டு பூவசரன்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே சிறுமி மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த கிருசாந்தன் தட்சாயினி என்ற 3 வயது சிறுமியே இவ்வாறு மரணமடைந்தவராவார். (R)

