கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இருந்த குளவிக் கூடு களைந்தமையால் 25 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று பகல் 1.30 மணியளவில் குரங்குகளின் நடவடிக்கையால் குளவிக் கூடு களைந்துள்ளது.

இதில் மாணவர்கள் பதற்றத்துக்கு உள்ளாகியதோடு, சில மாணவிகள் குளவி கொட்டுக்கு உள்ளாகி மயக்கமடைந்தும் காணப்பட்டனர்.

Share.
Leave A Reply