அனுராதபுரம் எப்பாவல, எந்தகல பிரதேசத்தில் வீடொன்றில் இரு ஆண்களின் சடங்களை எப்பாவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இரு ஆண்களின் சடலங்களும் வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட நிலையில் குறித்த வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 32 மற்றும் 48 வயதுடைய ஆண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் வீட்டில் மது அருந்திக் கொண்டிருந்த போது தாக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த இரட்டைக் கொலை நடந்திருக்கலாம் என மேலும் சந்தேகிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இக்கொலை தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை எப்பாவல பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply