ராகம பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் எரிகாயங்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை (7) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மஹாபாகே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 74 வயதுடையவர் எனவும், அவரது மகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில். அவரது கணவர் நேற்று (6) இரவு மகளைப் பார்க்கச் சென்று, இன்று காலை வீடு திரும்பிய போது, தனது மனைவி வீட்டின் உள்ளே எரிந்த நிலையில் சடலமாக  கிடந்துள்ளதாக குறித்த கணவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குறித்த மரண விசாரணைகள் வத்தளை நீதவானால் இன்று காலை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் குறித்த  மரணம் கொலையா என்பது தொடர்பில் மஹாபாகே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply