லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தான் தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் என்று கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நயன்தாராவை மிஞ்சும் அளவுக்கு நடிகை ஒருவர் தற்போது அதிக சம்பளம் வாங்கி வருவதாக திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
நடிகை பூஜா ஹெக்டே நடித்த ‘ஆச்சார்யா’ மற்றும் ‘ராதே ஷ்யாம்’ ஆகிய இரண்டு படங்களும் சுமாரான வசூல் செய்தது. விஜய்யுடன் பூஜா நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று கூற முடியாது.
இருப்பினும் தமிழ் தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களின் விரும்பத்தக்க நடிகையாக பூஜா ஹெக்டே உள்ளார் என்றும் அதனால்தான் அவருக்கு சம்பளம் உயர்ந்து கொண்டே வருகிறது என்றும் கூறப்படுகிறது.
தற்போது அவர் ‘சர்க்கஸ்’ என்ற பாலிவுட் படத்திலும் ‘ஜன கன மன’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்கள் வெற்றி பெற்றால் அவருடைய சம்பளம் இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
தென்னிந்திய திரையுலகை பொறுத்தவரை நயன்தாரா 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வரும் நிலையில் பூஜா ஹெக்டே 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இதைவிட இன்னும் சம்பளம் கொடுக்க ஒரு சில தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.