இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகள் எதுவும் உதவி செய்ய முன் வரவில்லை. இந்தியக்  கடனுதவித்  திட்டம் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.

இந்தியாவின்  உதவியை தொடர்ந்து பெற்றுக்கொள்ள  பேச்சுவார்த்தையினை முன்னெடுப்பது அவசியமாகும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டால் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை நாட்டை முடக்கும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் எதனையும் மேற்கொள்ள  முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் புதன்கிழமை (08) இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்

உதவிகளை வழங்க  பெரும்பாலானோர் தயாரில்லை.நாடு எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையில் இருந்து மீள வேண்டுமாயின் பாராளுமன்றம் முதலில் ஒரு நிறுவன அடிப்படையில் செயற்பட  வேண்டும். நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் புதிதாக ஏதும் குறிப்பிட விரும்பில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடன் தொலைப்பேசியில் உரையாடியுள்ளேன்.

சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்ட ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டால் ஏனைய நாடுகளின் உதவிகளையும் தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் செயற்திட்டத்தை எதிர்வரும்  மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் புதிய கொள்கைக்கமைய செயற்பட வேண்டும். நெருக்கடி நிலைமையில் இருந்து மீள வேண்டுமாயின் புதிய கொள்கைகள் செயற்படுத்தல் அவசியமாகும் நாட்டில். எரிபொருள் இல்லை, நிலக்கரி இல்லை எந்த நாடும் இவற்றை கொள்வனவு செய்ய நிதியுதவி வழங்கவில்லை.

இந்தியா மாத்திரமே  தற்போது உதவி வழங்குகிறது. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ்  அத்தியாவசிய உணவு பொருட்கள், மருந்து பொருட்கள் என்பன  பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

இந்திய கடனுதவி திட்டம் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்தியாவின் உதவியை தொடர்ந்து பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வேண்டும்.

அத்தியாவசிய தேவைகளுக்காக ஒத்துழைப்பு வழங்குங்கள் என  வலியுறுத்தியுள்ளேன். நாட்டை முடக்கும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் எதற்கும் பொறுப்பு கூற முடியாது என்றார்.

Share.
Leave A Reply