முல்லைத்தீவு – மல்லாவி, 4 ஆம் யூனிட் திருநகர் பகுதியில் நேற்று இரவு, இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இளைஞர்கள், ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் காயமடைந்து மல்லாவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதில், இருவர் வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்

Share.
Leave A Reply