குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் போது முன்கூட்டியே திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டு வருகை தருமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மே 17 ஆம் திகதி முதல் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் போது முன்கூட்டியே திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டு வருகைதருமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், சேவைப் பெறுநர்கள் பலர் முன்கூட்டியே திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ளாது சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகைதருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், முன்கூட்டியே திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டு ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள வருபவர்களுக்கு மாத்திரம் சேவைகள் வழங்கப்படும் என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன்.

அதற்கிணங்க, முன்கூட்டியே திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ளாது சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகைத்தரும் சேவைப்பெறுநர்கள் அசௌகரியங்களுக்கு உட்படுவதை தவிர்க்க முடியாது.

www.immigration.gov.lk எனும் இணையத்தளத்தையோ அல்லது 0707101060 எனும் தொலைபேசி இலக்கத்தையோ பயன்படுத்தி திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ள முடியும்.

தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதாயின் கடமை நாட்களில் மு.ப. 8.30 முதல் பி.ப. 3.00 வரை அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டாளர் நாயகம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

Share.
Leave A Reply