மரத்திலிருந்து விழுந்து பாடசாலை மாணவன் பலி – மஸ்கெலியாவில் சம்பவம்

மஸ்கெலியா – பிரவுன்லோ வனப்பகுதிக்கு தனது சகோதரனுடன் இன்று (12) காலை விறகு சேகரிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர், மரத்திலிருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் மரத்திலிருந்து தவறி விழுந்த நிலையில், ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவத்தில், மஸ்கெலியா சமனெலிய சிங்கள மகா வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி பயிலும், மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த 14 வயதுடைய எஸ்.ஜே.ரஜிந்த துல்சான் குணசேகர என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சிறுவனின் சடலம் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையிலிருந்து, டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply